வாகரையில் பாரம்பரிய உணவு உற்பத்தி கண்காட்சி!

வாகரை விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில் பாரம்பரிய உணவு உற்பத்தி கண்காட்சியும், விழிப்புணர்வு
நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

வாகரை, விவசாய திணைக்களத்தின் சந்தை கட்டடத்தில் இன்று குறித்த விவசாய போதனாசிரியர் எஸ்.பிரபாகரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

விவசாய திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சந்தைக் கட்டடம் வாகரையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இக்கட்டடத்தில் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முகமாகவும், பாரம்பரிய உணவுகளை மக்கள் மத்தியில் வெளிக் கொணரும் வகையிலும், நஞ்சற்ற உணவை மக்கள் உண்ணும் வகையிலும் இக்கண்காட்சியும், விழிப்புணர்வும் நடாத்தப்பட்டுள்ளது.

விவசாய சந்தைக் கட்டடத்தில் விவசாய திணைக்களத்தின் மூலம் பாரம்பரிய உணவு உற்பத்தி முறை தொடர்பாக பயிற்சி பெற்ற பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பாரம்பரிய உணவுகளை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக விவசாய போதனாசிரியர் எஸ்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.No comments

Powered by Blogger.