விசேட விவசாய உற்பத்தி மற்றும் விநியோக திட்டம் !

விவசாயிகளும் நுகர்வோரும் பயனடைய கூடிய வகையிலான விசேட விவசாய உற்பத்தி மற்றும் விநியோக திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது என விவசாய அமைச்சர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விவசாயிகளும் நுகர்வோரும் பாதிக்கப்படுகின்ற தற்போதைய உற்பத்தி பொருட்களின் விநியோக முறைமையை நெறிப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோரிடம் உட்பத்தி பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற போது அதில் வியாபாரிகள் மாத்திரம் உயரிய பயனை அடைந்துக் கொள்ளும் நடைமுறையை மாற்றும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.