அவரவர் மார்க்கம் அவரவர் மனதில்..!
பிறரின் நம்பிக்கைகளை ,எதிர்த்தும் , 
பிதற்றிப் பரிகசிப்பதும், ஒருவகை மனநோயே!
பிறப்பில் உண்டான பிழையாலேயே ,இந்த 
பித்து பிடித்து ,மனிதனை பீடித்து வருகிறது ..
பிற-மதத்தவன் வழிபாட்டினால் , உனக்கென்ன, 
பின்னடைவு வந்துவிடப் போகிறது ,சொல் .
பிறந்தாய் , வளர்ந்தாய் , நீ முன்னேறிச் செல். 
பிற்போக்காய் நடைப்போட்டு செல்லாதே!
பிறர் ,யாரை பின்பற்றினால் உனக்கென்ன, 
பிரச்சனை பிறந்துவிடப்போகிறது ?சொல் . 
பிறையை வழிபட்டால் உனக்கென்ன ?
பிறைசூடியவனை வழிபட்டால் உனக்கென்ன? 
பிற-லோகத்தில் இருக்கும் எல்லாம் வல்ல 
பிதாவை வழிபட்டால் தான் உனக்கென்ன? ,
பிறர் வழிபாடு ஒருபோதும் மற்றவருக்கு 
பிறழ்வைத் தந்துவிடப் போவதில்லையே!!
மத நேசன்

No comments

Powered by Blogger.