ரணில் மோடி இரகசிய பேச்சு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் இடையில் மூடிய அறையில் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தையின் போது “தன்னை கொலை செய்ய றோ சதித்திட்டம் தீட்டியதாக” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே பேசப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் புது டில்லியில் வைத்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் மூடிய அறையில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இந்நிலையிலேயே “தன்னை கொலை செய்ய றோ சதித்திட்டம் தீட்டியதாக” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இந்த இரகசிய பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய இருதரப்பு பேச்சுக்களின் போது, ஜனாதிபதி ‘றோ’ பற்றிக் கூறியது தொடர்பான எந்த விடயமும், கலந்துரையாடப்படவில்லை.

இந்தக் கலந்துரையாடலில், இந்திய - இலங்கை கூட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்துவது மற்றும் தடைகளை அகற்றுவதிலேயே பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, மோடியும், ரணிலும் நடத்திய தனியான சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன.

இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக அறிக்கைகளை வெளியிடாமல் இரண்டு தரப்புகளும், விலகிக் கொண்டன.

எனினும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாகவே ரணிலும், மோடியும் தனியாக சந்தித்த போது முக்கியமாக கலந்துரையாடியதாக இந்த விடயங்களுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக” அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Ranil Wickremesinghe #Narendra Modi #Colombo 

No comments

Powered by Blogger.