கிளிநொச்சியில் விவசாய காணியில் கைக்குண்டுகள்!

கிளிநொச்சியில் விவசாய காணி ஒன்றில் கைக்குண்டுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றும் நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளது.


கிளிநொச்சியில் நேற்று விவசாயம் செய்வதற்காக குடியிருக்கும் காணியை தனியார் ஒருவர் சுத்திகரிப்பில் ஈடுபட்ட வேளை, வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டுகள் இன்று முற்பகல் அகற்றப்பட இருந்த போதிலும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அகற்றப்பட வேண்டும் என்பதால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், வெடிபொருள் தொடர்பில் பாதுகாப்பான நடவடிக்கைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குறித்த கைக்குண்டுகளை அகற்ற நீதிமன்றின் அனுமதியை கோரியிருந்த நிலையில் நேற்றய தினம் அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த கைக்குண்டுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் வேறு வெடிபொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் பொலிஸார் நீதிமன்றின் கண்காணிப்பில் சோதனையிட உள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.