திருமலையில் வாள்வெட்டு அட்டகாசம்!

திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை - மட்கோ, மஹாமாயபுர பகுதியில் இன்று பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள் வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாளினால் வெட்டியதாக கூறப்படும் 6 பேரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 47 வயதுடைய டி.பி.அமரகீர்த்தி, தாயாரான 39 வயதுடைய ஆர்.தினுஷா பியந்தி மற்றும் 22 வயதுடைய டி.பி. அக்சயா,17 வயதுடைய டி. பி. டி சான் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் வாளால் வெட்டியதாக கூறப்பட்ட மற்றைய குழுவைச் சேர்ந்த 6 பேரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் 52 வயது, 47 வயது, 38 வயது, 27 வயது, 24 வயது மற்றும் 19 வயது உடையவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.