சுசீந்திரனுடன் மோதும் ‘சூப்பர் சிங்கர்’!

சூப்பர் சிங்கர் வாயிலாகக் கவனம்பெற்ற செந்தில் கணேஷ் நடிக்கும் கரிமுகன் எனும் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் எனும் நிகழ்ச்சி வாயிலாகக் கவனம் பெற்றவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலக்‌ஷ்மி. போட்டியாளர்கள் பலரும் சினிமா பாடல்களைப் பாடிக் கவனம்பெற்ற நிலையில், இந்த ஜோடியோ முழுக்கவே கிராமியப் பாடல்களாகப் பாடி அரங்கை அதிரவைத்துவந்தனர். அந்த சீசனின் வெற்றியாளராக செந்தில் கணேஷே தேர்வும் ஆனார்.

அதன் வாயிலாகத் தற்போது சில சினிமா படங்களிலும் பாடல்களைப் பாடிவருகிறது இந்த ஜோடி. இந்நிலையில் கரிமுகன் எனும் படத்தில் தற்போது நடிக்கிறார் செந்தில் கணேஷ். செல்ல.தங்கையா இயக்கும் இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகிவருகிறது.

சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகிக் கவனம்பெற்ற நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தீபாவளி வெளியீட்டுப் படங்கள் வருவதால் ஜெய் நடிக்கும் ஜருகண்டி, சுசீந்திரன் இயக்கும் ஜீனியஸ் போன்ற படங்களுடன் உத்தரவு மஹாராஜா,வாண்டு,காட்டுப்புறா, வன்முறைப் பகுதி,எடக்கு, வினை அறியார் போன்ற படங்களும் கரிமுகன் வெளியாகும் அதே தேதியிலேயே ரிலீஸ் ஆகின்றன. இத்தனை போட்டிப்படங்களுடன் களமிறங்கும் கரிமுகன் எவ்வாறு அதை எதிர்கொள்ளப் போகிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments

Powered by Blogger.