மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்..!

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்வர் இப்ராஹிம் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றிப் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மகாதிர் வசம் இருந்து பிரதமர் பதவியை அவர் விரைவில் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அன்வர் இப்ராஹிம் 31,016 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் நஸ்ரி முக்தார் வெறும் 7,000 வாக்குகளே பெற்றார்.

முன்னதாக மகாதிர் ஆட்சியில் துணை பிரதமராக இருந்த அன்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால், அந்தப் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர் 2015-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சூழலில் நஜிப் ரசாக்கின் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்ததால், அவரை ஆட்சியில் இருந்து அகற்ற 93 வயதான மகாதிர் மீண்டும் அரசியல் களத்தில் குதித்தார். பழைய கசப்புணர்வுகளை மறந்து அன்வரையும் தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டார். அத்துடன் வெற்றிப் பெற்றால் விடுதலை செய்வதோடு, அன்வர் பிரதமர் பதவியேற்க வழி விடுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி இடைத்தேர்தலில் அன்வர் வெற்றிப் பெற்றிருப்பதால் விரைவில் அவர் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Powered by Blogger.