நீதிபதி இளம்செழியனின் பெயரில் மலையகத்தில் புதிய கிராமம்!

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 20 கோடி ரூபா செலவில் பண்டாரவளை பூணாகலை
அம்பிட்டிகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 157 தனி வீடுகளைக் கொண்ட ‘இளஞ்செழியன் புரம்’ கிராமம் இன்று திறந்து வைக்கப்பட்டது.அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஹரிண் பெர்னாண்டோ, ரவீந்திர சமரவீர, பி. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பிரதி அமைச்சர் பைசால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், அ.அரவிந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தனர். வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரத்தையும் வழங்கி வைத்தனர். 

No comments

Powered by Blogger.