உணவு விஷமாகியமையால் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பத்தனை தேசிய ஶ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் உணவு விஷமடைந்ததில், 70 க்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் சிகிச்சைக்காக, கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நேற்றிரவு உணவு உட்கொண்டதையடுத்து, இன்று காலை அவர்கள் சுகயீனமடைந்துள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சச்சித்ரி ஷ்ர்மா தெரிவித்துள்ளார்.

வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளால் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 48 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.