இங்கிலாந்து அணிக்கு எதிராக 366 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (23 ) இடம்பெறுகின்றது.


இன்றைய போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 366 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக திக்வெல்ல 95 ஓட்டங்களையும் சந்திமால் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டொம் குரான் மற்றும் மோயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இதன்படி இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 367 ஓட்டங்களை பெற வேண்டும். 

No comments

Powered by Blogger.