சக நடிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த தனுஸ்ரீ தத்தா!

தனது  சக நடிகையான ராக்கி சாவந்த் மீது  தனுஸ்ரீ தத்தா மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் நடிகர் நானாபடேகர் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக் கொண்டார் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வேறு சில பிரபலங்கள் மீதும் அவர் புகார் அளித்தார். பாலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கிய இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் நானா படேகர் தனது வழக்கறிஞர் மூலம் தன்னை பற்றி தவறான செய்தி பரப்பியதற்கு தனுஸ்ரீ தத்தா மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பினார். அதை அடுத்து தனுஸ்ரீ மும்பை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். நானா படேகர் மீதான இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனுஸ்ரீக்கு ஆதரவாக பல நடிகர் நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அந்த காட்சியில் தனுஸ்ரீக்கு பதிலாக நடித்த நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறி பல கருத்துக்களை தனுஸ்ரீ க்கு எதிராக கூறினார்.

தற்போது நடிகை ராக்கி சாவந்த் மீது ரூ. 10 கோடி கேட்டு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்துள்ளார்

இது குறித்து தனுஸ்ரீ தத்தாவின் வழக்கறிஞர், “எனது கட்சிக்காரரின் புகழ் மற்றும் நற்பெயரை களங்கப் படுத்தும் படி பேசிய ராக்கி சாவந்த் மீது குற்றவியல் மற்றும் அவதூறு வழக்கு பதிந்துள்ளோம்.

நஷ்ட ஈடாக ரூ. 10 கோடியை நடிகை ராக்கி சாவந்த் தரவில்லை எனில் அவர் இரண்டாண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரு தண்டனைகளும் சேர்ந்து விதிக்கப்படலாம்” என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.