நானுஓயா ஏ7 வீதி வழமைக்கு திரும்பியது!

நானுஓயா  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட்  ஏ7 வீதியில்  ஏற்பட்ட மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

.கடந்த இரு தினங்களாக இப்பிரதேசத்தில் பெய்த கடும் மழையால், டெஸ்போட் 168 வது மைல் கல் பகுதியில் நேற்று இரவு இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த மண்சரிவு காணரமாக நுவரெலியா, தலவாக்கலை, மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.இதனையடுத்து நீண்ட நேர சிரமத்தின் பின் போக்குவரத்தினை நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வழமைக்கு திருப்பியுள்ளனர்.

தென்மேல் பருவ பெயர்ச்சி மழை நுவரெலியா பிரதேசத்திற்கு தொடர்ச்சியாக பெய்து வருவதனால் இவ்வாறான மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதனாலம், சாரதிகள் மற்றும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.