மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் 122 ஆணிகள்!

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது அவரின் வயிற்றிலிருந்து 122 ஆணிகளை மீட்டெடுத்துள்ள சம்பவமொன்று எத்தியோப்பியாவில் இடம்பெற்றுள்ளது.


இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தாவித் தியாரே கூறியதாவது,

மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மனநலம் பாதிப்பு தொடர்பான மருந்துகளை அவர் கடந்த 2 ஆண்டுகளாக உட்கொள்ளவில்லை. இக் காலத்தில் அவர் ஆணிகளையும் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.

அந்த நபர் எதையேனும் விழுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவரின் வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். இதன்போதே குறித்த 122 ஆணிகளையும் மீட்டுள்ளோம்.

அவை ஒவ்வொன்றும் 10 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தன. அதிர்ஷ்டவசமாக ஆணிகள் எவையும் அவரது வயிற்றை கிழிக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.