”தமிழ் மக்கள் கூட்டணி” புதிய கட்சிஅறிவித்த முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன்.!

புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.


தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமான கூட்டம் நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகியிருந்தது.

வடமாகாண சபையின் ஆட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வைத்து தான் புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் கூட்டணி என்பதே அவரின் புதிய கட்சியெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த அறிவிப்பின் பின் யாழ். அரசியலில் பல திடீர் திருப்பங்கள் காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
Powered by Blogger.