வடக்கு, கிழக்கின் சலுகைகளை நல்லினக்க அரசாங்கம் பறித்துள்ளது!

பல வருடங்களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்த போதும், இந்த அரசாங்கம் அதன் சலுகைகளை பறித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.


அத்துடன் 25 வருடங்களின் பின்னர் அங்கு தேர்தலை நடத்தியிருந்த போதும் கூட தற்போது அரசாங்கம் தேர்தலுக்கு முகங்கொடுக்க பயப்படுகின்றது என கூறினார்.

தங்காலையில் நடைபெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆகியன எதிர்கால தேர்தலில் இணைந்து செயற்படுவது தொடர்பில் எவ்வித தீர்மானம் எடுக்கப்படவில்லை.

மேலும், 25 வருடங்களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தோம் அதுவும் கலையவுள்ள நிலையில், அவர்களின் சலுகைகளை தற்போதுள்ள அரசாங்கம் பறித்துள்ளது.

தனி நபர் பிரேரணையை கொண்டு வருவதால் பயனில்லை. குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அவர்களே தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பினை அரசாங்கம் செயற்படுத்தவில்லை” எனவும் கூறினார். 

#Makintha #colommbo  #srilanka  #tamilnews #news  #sri sena #maithiripala

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.