யாழ்.அச்சுவேலி தொழில்பேட்டையில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்த முடிவு!

யாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் பொதுமக்கள் சேர்ந்து தமக்கான அடிப்படை வசதி கோரி  மாபெரும் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை (25) வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளனர்.


தண்ணீர், மின்சாரம் ,வீதி புனரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை வழங்குமாறு கோரியே இந்த ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த ஊர்வலப் போராட்டம் அச்சுவேலி சங்கானை வீதியில் இருந்து தொடங்கி இராச வீதி கைத்தொழில் பேட்டையில் நிறைவுபெற்று கோப்பாய் பிரதேச செயலர் சுபாசினி மதியழகனிடம் மகஜர் ஒன்றையும் போராட்டத்தில் ஈடுபடுவோர் கையளிக்கவுள்ளனர்.

அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் 5  கைத்தொழிற்சாலைகள் இயங்குகின்றன. 2 தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த தொழிற்பேட்டைக்கு செல்லும் வீதி 50 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பின்றி காணப்படுகிறது.

மேலும் அந்தப் பிரதேசம் தண்ணீர் மின்சார வசதியின்றி காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அடிப்படை வசதிகோரி சம்பந்தப்பட்ட தரப்பிடம் கோரிக்கை விடுத்தும் எதுவித பதிலும் வராத நிலையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கைத்தொழில் பேட்டை இயங்கும் பட்சத்தில் அதற்கான தண்ணீர், மின்சார ,வீதி ,புனரமைப்புகளை செய்து தருவதாக ஒப்பந்த்த்திலே குறிப்பிடப்பட்டும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.