கடற்படை லெப்டினட் கமாண்டர் ஒருவர் விளக்கமறியலில்!

ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையின் லெப்டினட் கமாண்டார் சம்பத் தயானந்தவை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2009ஆம் ஆண்டு இரண்டு பேரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சம்பத் தயானந்தவை இன்று கைதுசெய்தது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய சந்தேக நபரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இரண்டு பேரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாகவே சம்பத் தயானந்தவை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு நகர சபையின் ஊழியர்களான வடிவேலு லோகநான் மற்றும் ரத்னசாமி பரமநாதன் ஆகியோரை கடந்த 2009ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் போக செய்ததாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற வருமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதற்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த சம்பத் தயானந்தவை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரி லெப்டினட் கமாண்டர் அனில் மாபா ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.