சவுதி ஊடகவியலாளர் இலங்கையில் கொல்லப்பட்டார்!

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் 10 முதல் 12 ஆண்டுகள் இலங்கையிலும் சவுதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டது போன்ற கொலைகள் நடந்ததாக நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிரியதர்ஷனி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் அதிஷ்டம் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அப்படியான துரதிஷ்டவசமான, கொடூரமான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

எனினும் சாட்சியங்கள் இருந்தும், கடந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த கொலை, கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை என்பதே பிரச்சினைக்குரிய விடயம்.

இவ்வாறான சூழ்நிலையில், ராஜபக்ச தரப்பினர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு மோசடியான முறைகளை பயன்படுத்தி வருவதாகவும் பிரியதர்ஷனி ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, துருக்கியின் இஸ்தாம்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் துணை தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

சவுதியின் முடிக்குரிய இளவரசர் சல்மானின் அரசியல், ராஜதந்திர நடவடிக்கைகளை ஜமால் கஷோசி கடுமையாக விமர்சித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.