மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை!

கொத்மலையில் பிரபல பாடசாலையின் ஆசிரியை ஒருவர் மாணவியை கடுமையாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையில் சிங்கள பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தடியால் கை வீங்கும் வரை அடித்துள்ளார்.

எனினும் மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் இரகசியமாக ஆயுர்வேத சிகிச்சை வழங்கியதாக புசல்லாவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

தாக்குதல் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை சந்தன துசித குமார, புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

தடியால் தாக்கியதன் காரணமாக குறித்த மாணவியின் கை வீங்கி அசைக்க முடியாத காரணத்தினால் பயந்த ஆசிரியை ஏனைய ஆசிரியர்களின் ஆலோசனைக்கமைய ஆயுர்வேத மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் குறித்த ஆசிரியை தனது நண்பர் ஒருவரின் வீட்டில் குறித்த மாணவியை தங்க வைத்துவிட்டு, மாணவி விழுந்து கையில் மருந்து கட்டியள்ளதாக பெற்றோருக்கு அறிவித்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

அதன்பின்னர் உண்மையை அறிந்து கொண்ட பெற்றோர் அந்த மாணவியை புசல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

வகுப்பறைக்குள் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் கோபமாக இருக்கும் இந்த ஆசிரியை மற்றமொரு மாணவரை தாக்கியதில் கண் பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.