சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா கைதுக்குத் தடை!

ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை அக்டோபர் 29ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


லஞ்ச வழக்கில் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ராகேஷ் அஸ்தானா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ராகேஷ் அஸ்தானா டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 23 )மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அக்டோபர் 29ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தது. அதுவரை ராகேஷ் அஸ்தானாவை கைது செய்யக் கூடாது எனவும் கூறியுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டோர் தொடர்பான அனைத்து ஆவணங்கள், கைபேசிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து வைக்க வேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Powered by Blogger.