அனந்தியின் கட்சியின் பின்னணி?

முதலமைச்சர் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கப் போகிறார். நல்லூரில் கூட்டம் இன்று .நடக்க இருக்கிறது.


முதலமைச்சரின் கூட்டத்தை நோக்கித்தான் இன்று அனைவரதும் பார்வைகள் திரும்பியுள்ளன.

முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கிறார், கட்சியின் விபரத்தை அறிவிக்கிறார், யார் யாருடன் கூட்டணியென்பதை அறிவிக்கிறார் என பலவாறு தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

நாளை முதலமைச்சர் என்ன அறிவித்தல் விடுக்கப் போகிறார்?

முதலில் ஒன்றை உறுதியாக சொல்லலாம்- இப்படி பரவும் எந்த தகவலின்படியும் நாளை முதலமைச்சரின் உரை அமையாது.

முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்றே அதை உறுதிசெய்தன. முதலமைச்சரின் அண்மைய உரைகளை தொகுத்தாலே, இன்று உரை குறித்த ஒரு அண்ணளவான உருவத்தை எடுத்துக் கொள்ளலாமென்றார்கள் முதலமைச்சரிற்கு நெருக்கமான வட்டாரங்கள்.

இந்த மேலோட்டமாக தகவல் போதுமா?

போதாது. முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேலும் மேலும் கிளறினோம். தனி அணி விபரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற அவசரம் எதுவும் முதலமைச்சரிடம் கிடையாது. ஆனால் தமிழ் மக்கள் பேரவைக்காரர்கள் கொஞ்சம் அவசரக் குடுக்கைத்தனமாக நடக்கிறார்கள். உடனடியாக அரசியல் நிலைப்பாட்டை- அதுவும் தனி வழி, தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியில் வந்து போட்டியிடும் முடிவை- அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.

கடந்த நான்கைந்து மாதங்களாகவே இந்த வலியுறுத்தல்கள் அதிகமாக இருந்தன. ஒரு மாதங்கள் பொறுங்கள் ஒன்றரை மாதங்கள் பொறுங்கள் என முதலமைச்சர் சமாளித்து வந்தார். இனி சமாளிக்க முடியாதென்ற நிலைமை வந்து விட்டது. காரணம், மாகாணசபையின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. அதற்கடுத்த நாள் முடிவை அறிவியுங்கள் என அவர்கள் விடாக்கண்டன்களாக நிற்கிறார்கள்.

இப்போதைக்கு முதலமைச்சரிடம் எந்த கட்சியும் கிடையாது. முதலமைச்சரின் மகனிடம் கட்சியொன்றை வாங்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததுதான். அது சில மாதங்களிற்கு முற்பட்ட கதை. அது வெற்றியளிக்கவில்லை. முதலமைச்சரும் அதன்பின் ஆர்வம் காட்டவில்லை. முதலமைச்சர் கட்சியொன்றை தனியாக உருவாக்குவதை தமிழ் மக்கள் பேரவையிலுள்ள பிரமுகர்களும் விரும்பவில்லை. தமிழ் மக்கள் பேரவையை வலுப்படுத்தலாம், அதன் மூலம் அரசியல் அணியை உருவாக்கலாமென்பது அவர்களின் நிலைப்பாடு. இவர்களின் முடிவை நோக்கி நகரத் தொடக்கிய போதே- தனிக்கட்சி முடிவில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக விலகி, மக்கள் இயக்கம் என்ற நிலைப்பாட்டிற்கு முதலமைச்சரும் வந்ததாக அறிக்கைகளில் வெளிப்படுத்தினார்.

இப்பொழுது முழுமையாக, தமிழ் மக்கள் பேரவையின் மூலமான அரசியல் இயக்கம் என்ற நிலைப்பாட்டிற்கே முதலமைச்சர் வந்து விட்டார்.

மாகாணசபையில் தனக்கு நெருக்கமாக உள்ள உறுப்பினர்களுடன் இதைப்பற்றி விரிவாக பேசி, அவர்களிற்கும் புரிய வைத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் மூலம் ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவது, மாகாணசபையின் பின்னர் ஒவ்வொரு கிராமம் கிராமமாக செல்வது, மக்களுடன் பேசுவது, அரசியல் கைதிகள், நில அபகரிப்பு, அரசியல் தீர்வு முயற்சிகளிற்காக வெகுஜன போராட்டங்களை நிறுவன மயப்படுத்தல் என்ற ரீதியில் பாதையை அமைக்கவுள்ளார். உடனடியாக எந்த அரசியல் கட்சியையும் அறிவிப்பதில்லை. எந்த கூட்டணியையும் உருவாக்குவதில்லை.

தேர்தல் எப்பொழுது வருமென்றே தெரியாது. அதனால் தேர்தலை மனதில் கொள்ளாமல் வெகுஜன போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவது, மக்களை அணி திரட்டுவது என்றரீதியில் அடுத்து வரும் மாதங்களில் செயற்படவுள்ளனர். இந்த சமயத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் இயக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டுமென மக்கள் விரும்பினால், களமிறங்குவோம். இதுதான் முதலமைச்சரின் இப்போதைய திட்டம்.

அப்படியொரு நிலைமை வரும்போது, தமது அரசியல் நிலைப்பாட்டை ஏற்று யார் எல்லாம் ஒன்று சேர்கிறார்களோ, அவர்கள் எல்லோருடனும் கூட்டணி அமைக்கலாமென்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு. தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்தவர் இணைப்பும் ஆரம்பமாகும். இதற்கான படிவங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.

 தமிழ் மக்கள் பேரவையின் முலமாக மக்கள் இயக்கம் குறித்த அறிவிப்பே நாளை வெளியாகிறது.

அனந்தியின் கட்சியின் பின்னணி?

அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்ததும், அதன் பின்னணியில் முதலமைச்சர் இருக்கிறார் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார். அனந்தியின் மூலம் கட்சியை ஆரம்பித்து, பொருத்தமான சமயத்தில் முதலமைச்சர் அதை கையிலெடுப்பார், அதற்காக அனந்தியை அவர்தான் களமிறக்கினார் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்.

No comments

Powered by Blogger.