கடற்கரும்பு​லிகள் மேஜர் நளினன்- கப்டன் ஜெயராஜ் ஆகியோரின் நினைவு நாள் இன்று!

திருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நளினன்இ கப்டன் ஜெயராஜ் மற்றும் கடற்புலி 2ம் லெப்.மதன்இ வவுனியாவில் காவியமான மேஜர் திருமகன் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


25.10.1996 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான “டோறா” அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து மூழகடித்து,

1.கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) (தெய்வேந்திரன் யோகேஸ்வரன் - மூதூர், திருகோணமலை)

2.கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) (கந்தசாமி கோபாலகிருஸ்ணன் - காரைநகர், யாழ்ப்பாணம்)

3.2ம் லெப்டினன்ட் மதன் (நாகராசா குகதாசன் - விநாயகபுரம், அம்பாறை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதே நாள் வவுனியா கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது,

மேஜர் திருமகன் (விஜேய்) (நவரட்ணராஜா நாகராசா - யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

No comments

Powered by Blogger.