த்ரிஷா வழியில் ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டகிராம் கணக்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சூர்யா நடிக்கும் என்ஜிகே மற்றும் கார்த்தி நடிக்கும் தேவ் போன்ற படங்களில் பிஸியாக இயங்கிவருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் ரவிக்குமார் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என வலம்வரும் அவர் இந்தியில் தற்போது அஜய் தேவ்கன் நடிக்கும் தே தே பியார் தே படத்திலும் தபுவுடன் இணைந்து நடித்துவருகிறார்.
ட்விட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிஸியாக இயங்கிவரும் அவர் இன்று (அக்டோபர் 24) தனது இன்ஸ்டகிராம் கணக்கு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் இட்டுள்ள அந்த பதிவில், “ எனது இன்ஸ்டகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே எனது கணக்கிலிருந்து வரும் எந்த லிங்கிற்கும், மெசேஜிற்கும் கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை பதிலளிக்க வேண்டாம். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபலங்களின் சமூக வலைதளக் கணக்குகள் இதுபோல ஹேக் செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடந்துவருகிறது. ஹேக் செய்யப்படுவதுடன் நின்றிவிட்டால் கூட பரவாயில்லை. சில சமயங்களில் ஹேக்கர்கள் அந்தக் கணக்குகளிலிருந்து தேவையற்ற பதிவுகள், மெசேஜ்களையும் பதிவிடும்போது அது பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. பயனர்கள் சிலர் தங்களின் கணக்குகளை முறையாகப் பராமரிக்காததாலும், சரியாகக் கையாளாததாலும்கூட இதுபோன்ற ஹேக்கிங்குகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கும் இதேபோல ஹேக் செய்யப்பட்டிருந்தது எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.