ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2515 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று சந்தேக நபரை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி பொலிஸ் போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழையூற்று, இறக்கக் கண்டி பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர் 2515 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரளை, கொழும்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#Trincomalee #Court  #திருகோணமலை, #குச்சவெளி  #ஹெரோயின்
Powered by Blogger.