யாழில் விசேட அதிரடிப் படை!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் கடந்த சில தினங்களாக வாள்வெட்டு சம்பவங்கள்அதிகரித்திருந்தன. அதிலும் கொக்குவில் பகுதியிலேயே அதிகளவு வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமையும் வீடொன்றின் மீது தாக்குதல் நடந்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே நேற்றிலிருந்து கொக்குவில் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களிலும், நடந்தும் அவர்கள் வீதிச்சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

No comments

Powered by Blogger.