வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பண்ணைகளை அகற்ற முடிவு!

வட-­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் இரா­ணு­வத்­தி­னர் நடத்தி வந்த பண்­ணை­களை மக்­க­ளி­டம் ஒப்­ப­டைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டுள்­ளது. இதனை முன்­னெ­டுப்­ப­தற்கு எதிர்­வ­ரும் வரவு – செல­வுத் திட்­டத்­தில் நிதி ஒதுக்­கப்­ப­ட­வுள்­ளது.


வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் இரா­ணு­வத்­தி­ன­ரால் பண்­ணை­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. மக்­க­ளி­டம் அவற்­றைக் கைய­ளிக்­கு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னால் பல தட­வை­கள் வலி­யு­றுத்­தப்­பட்­டன. வட­கி­ழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணிக் கூட்­டத்­தி­லும் இந்­தக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

தாம் நடத்­தும் பண்­ணை­களை மக்­க­ளி­டம் கைய­ளிப்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்கு குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக, இரா­ணு­வப் பேச்­சா­ளர் கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்­தார். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே அவற்றை மக்­க­ளி­டம் கைய­ளிக்க இரா­ணு­வம் முடிவு செய்­துள்­ளது.

இந்­தப் பண்­ணை­களை விவ­சா­யத் திணைக்­க­ளத்­தி­டமா அல்­லது யாரி­டம் கைய­ளிப்­பது என்று இரா­ணு­வத்­தி­னர் கோரி­யி­ருந்­த­னர். விவ­சா­யத் திணைக்­க­ளத்­தி­டம் கைய­ளிப்­பதை விட, கூட்­டு­றவு அமைப்­புக்­கள் ஊடாக மக்­க­ளி­டம் நேர­டி­ய­டி­யா­கக் கைய­ளிக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பண்­ணை­களை, இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­மி­ருந்து கூட்­டு­றவு அமைப்­புக்­க­ளுக்கு மாற்­று­வ­தற்­கு­ரிய நிதியை, அடுத்த மாதம் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு – செல­வுத் திட்­டத்­தில் ஒதுக்­கு­வ­தற்கு நிதி அமைச்சு இணங்­கி­யுள்­ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.