வேலைவாய்ப்பை உயர்த்தும் மொபைல் உற்பத்தி!

மொபைல் போன் உற்பத்தி அதிகரித்து வருவதால் உள்நாட்டில் அதிகமான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வாயிலாக கோடிக் கணக்கான

வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதிக்குப் பக்கபலமாக மொபைல் போன் உற்பத்தியால் இந்தியாவில் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து மொபைல் போன்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் மொபைல் விற்பனையில் ஈடுபட்டு வந்த லாவா நிறுவனம் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு அடித்தளமிட்டது. லாவா நிறுவனம் டெல்லிக்கு அருகில் இரண்டு ஆலைகளை அமைத்து உள்நாட்டிலேயே மொபைல் போன்களைத் தயாரிக்கிறது. இதன் வாயிலாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆலையை விரிவுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.
லாவா போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியால் சாம்சங், க்ஷியோமி உள்ளிட்ட நிறுவனங்களும் அதிக முதலீடுகளைக் கொட்டி இந்தியாவில் தங்களது உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், மொபைல் உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள 120 புதிய ஆலைகள் வாயிலாக சுமார் 4,50,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்தான் இத்துறையில் இவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு பொருட்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற வளர்ச்சியால் சர்வதேச அளவில் மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது மிகப் பெரிய சந்தையாகத் திகழ்கிறது. இப்பிரிவில் சீனாவை வீழ்த்தி இந்தியா முதலிடத்துக்கு முன்னேறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.