தொழிலாளர்கள் விவகாரத்தில் சிந்திக்க வேண்டும்- திகாம்பரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தீர்வை வழங்காவிடின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தாம் வழங்கும் ஆதரவு தொடர்பில் மறுபரீசீலனை செய்யவேண்டிய நிலைமை ஏற்படுமென புதிய கிராமங்கள் உடகட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.


மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“மலையத்தில் பிறந்தவன் என்ற ரீதியில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிவேன். தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்வதற்கு அவர்களுக்கு வழங்குகின்ற சம்பளம் போதுமானது இல்லை.

மேலும் முதலாளிமார் சம்மேளனம் இம்முறையும் பொய்களை கூறி எமது மக்களை ஏமாற்ற முடியாது. அவ்வாறு 600 ரூபாய்க்கு மேலாக சம்பளத்தை வழங்க முடியாவிடின் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு  வீட்டுக்கு செல்வதே சிறந்தது.

மேலும் இதற்கு முற்பட்ட காலத்தில் உலக சந்தையில் தேயிலையின் விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது தேயிலையின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.

ஆகையால் முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தர முன்வர வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கமே தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.