யாழ். விரைவு தபால் சேவைகள் மேலும் பரவலாக்கப்படத் திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான விரைவு தபாலகச் சேவைகள் மேலும் பரவலாக்கம் செய்யப்படவுள்ளன என்று யாழ்ப்பாண முதன்மைத் தபாலக வட்டாரம் தெரிவித்தது.


யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் தபால் சேவை­களை துரி­தப்­ப­டுத்­தும் நோக்­கில் தபா­ல­கங்­க­ளுக்கு மோட்­டார் சைக்­கிள்­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. கோப்­பாய், வட்­டுக்­கோட்டை, கொக்­கு­வில் ஆகிய மூன்று தபா­ல­கங்­க­ளுக்கு நேற்று முன்­தி­னம் மோட்­டார் சைக்­கிள்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விரைவு தபால்ச் சேவை­க­ளில் மக்­கள் அதிக நாட்­டம் காட்டி வரு­வதை அடுத்தே, விரைவு தபால்ச் சேவை­களை படிப்­ப­டி­யாக பர­வ­லாக்­கம் செய்ய யாழ்ப்­பா­ணம் முதன்­மைத் தபா­ல­கம் நட­வ­டிக்­கை எடுத்­துள்­ளது என்று தெர।ிவிக்கப்பட்டது.

#jaffna  #post  #tamilnews   #news  #tamilarul.net   #srilanka

No comments

Powered by Blogger.