ஒபாமா, ஹிலாரி வீட்டில் மர்ம வெடிகுண்டு பார்சல் மீட்பு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, கடந்த அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டது. இதனை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடுத்து செயலிழக்கச் செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


இது தொடர்பாக அமெரிக்க ரகசிய கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '' அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வீடு, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் வீடு, சிஎன்என் செய்தி சானல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மர்ம பார்சல்கள் வந்தன.

இந்த பார்சல்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் முன், வழக்கமான சோதனையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, இரு பார்சல்களிலும் சந்தேகத்துக்கு இடமான வெடிபொருட்கள் இருப்பது உறுதியானது.

இரு பார்சல்களும் ஹிலாரி கிளிண்டன், ஒபாமா ஆகியோரின் கைகளுக்கு கிடைக்கும் முன்பே பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. அந்த பார்சலில் இருந்த மர்ம வெடிபொருட்கள் செயலிழப்பு செய்யப்பட்டது. அதில் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பவுடர், மற்றும் வெடிபொருட்கள் இருந்தன. வாஷிங்டன் டிசியில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா புதன்கிழமை தங்கி இருந்தபோது இந்த பார்சல் அவருக்கு அனுப்பப்பட்டது.

அதேபோல, நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி நகரில் உள்ள ஒரு கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேச இருந்த போது அந்த பார்சல் வழங்கப்பட இருந்தது'' எனக் குறிப்பிடப்ப்டுள்ளது.

இந்த மர்ம வெடிபொருள் பார்சல் தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.