அதிரடி மாற்றத்தில் இந்திய அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அடுத்த மூன்று போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பரபரப்பாக நடந்த இரண்டாவது ஆட்டம் டையில் முடிந்தது. அடுத்ததாக மூன்றாவது ஆட்டம் அக்டோபர் 27ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி (அக்டோபர் 25) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 15 பேரைக் கொண்ட அந்த புதிய பட்டியலில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த்,எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜாஸ்ப்ரித் பும்ரா, கலீல் அஹமது, உமேஷ் யாதவ்,கே.எல்.ராகுல், மனீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் கடந்த போட்டியில் விளையாடிய மொஹமது ஷமி நீக்கப்பட்டுள்ளார்.

இரு போட்டிகளிலுமே இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தபோதும் பந்துவீச்சில் சொதப்பியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு ஆட்டங்களிலுமே 300 ரன்களுக்கு மேல் குவித்தது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் ரன்களைக் கட்டுப்படுத்தியிருந்தால் இந்திய அணி எளிதில் வெற்றிபெற்றிருக்கலாம். எனவே இந்த அடிப்படையில் கணக்கிட்டால் அடுத்த போட்டியில் கே.எல்.ராகுலோ, மனீஷ் பாண்டேவோ லெவனில் விளையாட அதிக வாய்ப்பில்லை.

ஆனால் பந்துவீச்சில் நிச்சயமாக பெரிய அளவிலான மாற்றம் இருக்கும். குறிப்பாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா வருகையால் இந்த இருவருமே அடுத்த போட்டியில் களம் இறங்கிட அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.