இலங்கையின் அரசியல் நகர்வுகள் தொடர்பாக சுவிஸ் அவதானம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் அவதானித்து வருவதாக சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது.


மேலும் இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இதனை இலங்கைக்கான கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

அத்துடன் நவம்பர் 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் அறிவிப்பு தொடர்பிலும் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முறையான வழிமுறைகளை பின்பற்றவும் ஜனநாயகக் கோட்பாடுகளை மதித்து, நிறுவனங்கள் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை பேணுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று (வெள்ளிக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைத்து நாடுகளும் இவ்விடயத்தை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.