பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தை சபாநாயகர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்: ரிஷாட்

நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தை சபாநாயகர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.


அலரி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலகமே உற்றுப்பார்க்கும் ஒரு சம்பவமாக நேற்றைய சம்பவம் அமைந்திருந்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே இதற்கு உரிய தீர்வு காண முடியும்.

ஜனநாயகத்தை நம்புகின்ற இந்த நாட்டில், கலவரத்தை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு பிறகு சமாதானம் ஏற்பட்டு ஜனநாயகம் மலர்ந்திருக்கின்ற இக்காலத்தில் இந்த பிரச்சினையை வளரவிடக்கூடாது” என கூறினார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #அலரி மாளிகை  #ரிஷாட் பதியுதீன்  #சமாதானம்
Powered by Blogger.