யாழில் வெடிகொளுத்திய மஹிந்த ஆதரவாளர்கள்!

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழில் அவரது ஆதரவாளர்கள் வெடிகொளுத்தியும், ஆர்ப்பரித்தும் தமது மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.


யாழிலுள்ள பிரதான வீதிகள் ஊடாக, வாகனங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் பாரிய பதாகை ஒன்று கட்டப்பட்டு வாகன தொடரணியாக சென்ற ஆதவாளர்கள் முக்கிய சந்திகளில் வெடி கொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

அத்துடன் மத்திய பேருந்து நிலையத்தில் சிலர் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்ததுடன், பொங்கல் மற்றும் இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் தலைநகர் உட்பட பல பிரதேசங்களிலும் மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்றத்தை கொண்டாடி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் தமது மகிழ்ச்சியை ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்.

#Tamilnews #jaffna  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Mahinda  

No comments

Powered by Blogger.