பெரும்பான்மைக் கட்சிகள் ஜனாதிபதி மைத்திரியுடன் பேச்சு!

பெரும்பான்மைக் கட்சிகள் இன்று (சனிக்கிழமை) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


குறித்த சந்திப்பில் கூட்டு எதிரணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் போது புதிய அமைச்சரவை தொடர்பில் விவாதிக்கவும், அதனை இறுதி செய்யவும் இந்த சந்திப்பு நடைபெறும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல், இந்த புதிய அரசாங்கமானது உடனடியாக பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழ்நிலையை ஸ்திரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

அத்துடன் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நாடாளுமன்றில் 120 ற்கும் மேற்பட்ட ஆசனங்கள் என்ற பெரும்பான்மையை நிரூபிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.+
#Maithiri #Mahida #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 
Powered by Blogger.