மஹிந்தவுக்கு ஆதரவாகமட்டக்களப்பிலும் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகளை கொழுத்தி அவரின் ஆதரவாளர்கள்  மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்திற்கு முன்பாகவும் வெடி கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் மஹிந்த, பிரதமராக தெரிவு செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் பட்டாசு கொழுத்தி கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Batticalo  #Mahinda #Srisena #Maithiripala #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 
Powered by Blogger.