அர்ஜுன் ரெட்டி... வர்மா... அடுத்து?

பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்காக வர்மா உருவாகிவரும் நிலையில் அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக் படம் பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தெலுங்கில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த படம் அர்ஜுன் ரெட்டி. அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே அதில் நடித்திருந்தார். 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இந்திய அளவில் கவனம் பெற்றது. அதையடுத்து இயக்குநர் பாலா அந்தப் படத்தை வர்மா எனும் பெயரில் தமிழில் தற்போது ரீமேக் செய்துவருகிறார். விக்ரம் மகன் துருவ் இதில் நடிக்கிறார். துருவ்விற்கு இதுவே முதல் படம் எனும் காரணத்தால் இதன் வாயிலாக அவர் கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகம் ஆகவுள்ளார் .

தமிழில் பாலா ரீமேக் செய்வதைப் போல இந்தியிலும் இப்படம் ரீமேக் ஆகிறது. இதைத் தெலுங்கில் இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவே இயக்குகிறார். விஜய் தேவரகொண்டா நடித்த ரோலில் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கிறார். தெலுங்கு ஒரிஜினலில் பெங்களூருவும் ஹைதராபாத்தும் கதைக்களமாக இருந்த நிலையில், இதில் மும்பை மற்றும் டெல்லி கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் மேகா நடிக்கும் நிலையில் இந்தி ரீமேக்கில் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கில் வெற்றிபெற்றதால் இந்தியிலும் இந்தப் படம் ஒரு ரவுண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் இப்படத்திற்கு தற்போது டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இப்படத்திற்கு ‘கபிர் சிங்’ எனப் பெயர் வைத்துள்ளனர். அத்துடன் சேர்த்து பட வெளியீட்டுத் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் 2019ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.
#india   #Tamilnadu #Tamilnews  #tamilarul.net   #Tamil #Cinema News

No comments

Powered by Blogger.