இலங்கை மீது மலேசிய நிறுவனம் வழக்குத் தாக்கல்!

மலேசிய நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளவிருந்த பல மில்லியன் பெறுமதியான திட்டத்தை இலங்கை அரசு இரத்து செய்தமைக்கு எதிராக குறித்த நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.


150 மில்லியன் டொலர் செலவில் காற்று / சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை இரத்து செய்ததன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி, இணக்கசபை வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் ஐ.சி.எஸ்.ஐ.டி. பணி செயலகம் இந்த வழக்கை பதிவுசெய்துள்ளது. இதில் இலங்கையின் எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சு பிரதிவாதியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சூரிய மின் உற்பத்தி ஆலை ஒன்றை கட்டியெழுப்பும் முதலீட்டாளர் திட்டத்தை இலங்கை மின்சாரசபை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை பின்னர் 2016ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் இரத்து செய்தது. இதற்கிடையில் ஏற்கனவே 22 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை முதலீட்டாளர் செய்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் காலதாமதப்படுத்தியமையாலேயே வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.