யார்தான் பிரதமர்?

இலங்கை அரசியல் களம் இன்றைய தினம் படு சூடாகியுள்ளது, நினைத்துப்பார்க்க முடியாத தருணத்தில் பிரதமராக பதவியேற்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.


இந்நிலையில், நான் இன்னும் பிரதமர் தான் என்று ரணில் விக்ரமசங்க கூறி வருகிறார். மறுபக்கம் புதிதாக பிரதமராகியுள்ள ராஜக்ச சூட்டோடு சூடாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் என்று மாற்றியுள்ளார்.

இந்த திடீர் திருப்பத்தை இலங்கை மக்களே எதிர்பார்க்கவில்லை. ஒட்டுமொத்த நாடும் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. சுத்தமாக பெரும்பான்மை பலம் இல்லாத கூட்டணி சிறிசேன மற்றும் மகிந்த கூட்டணி. ஆனால் இவர்களை விட அதிக எம்.பிக்களைக் கொண்ட ரணில் விக்ரமசிங்கவை விரட்டி விட்டது.

பதவியேற்ற கையோடு தனது டுவிட்டர் பக்கத்தை பிரதமர் என்று மாற்றியுள்ளார் மகிந்த.

மறுபக்கம் ரணில் விக்ரசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை பிரதமர் என்றே தொடர்ந்து வைத்துள்ளார். இவர்களின் இந்த பதவி வெறி சண்டையால் இலங்கையே ஒட்டுமொத்த குழப்பத்திற்கும் உள்ளாகியுள்ளது.

 #jaffna  #colombo   #mahinha  #srilanka  #tamilarul.net   #Tamil  #Ranil 

No comments

Powered by Blogger.