ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை என்ன?

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் இந்நாட்டின் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியாஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் ஸ்தானிகர் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசியல் யாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதுடன் பொது ஸ்தாபனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரத்துக்கு மதிப்பாளிக்குமாறும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நாட்டின் தூதுவர்கள் உட்பட பல நாட்டு தூதுவர்கள் நேற்று (27) மாலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #France #Germany  #Italy  #Nerthaland  #Romaniya  #Eropa #பிரான்ஸ், #ஜேர்மனி, #இத்தாலி, #நெதர்லாந்து, #ரொமேனியா

No comments

Powered by Blogger.