மீண்டும் நம்பிக்கை அளித்த ஹோப்!

இந்திய அணி வெற்றி பெற 284 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையே 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் கலீல் அஹமதுவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா இடம்பெற்றுள்ளார்கள். உமேஷ் யாதவ், ஜடேஜா இடம்பெறவில்லை. மேற்கு இந்திய தீவுகள் அணியில் பிஷுக்கு பதிலாக ஃபேபியன் அலன் தேர்வாகியுள்ளார். இது அவருடைய முதல் ஒருநாள் ஆட்டமாகும்.
இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பாவெல், ஹெம்ராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹோப் தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்கள் எடுத்தார். இவர் கடந்த போட்டியில் சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரரான ஹெட்மெய்ர் 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழவே 50 ஓவர்களில் 283 ரன்களை அந்த அணி குவித்தது. பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிவரும் இந்திய அணி சற்று முன்புவரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

No comments

Powered by Blogger.