•இவை தற்செயலாக நடைபெறுகிறதா? அல்லது ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைபெறுகிறதா?

நேற்றையதினம் லண்டனில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் ஈஸ்ட்காம் நகரில்
உள்ள தமிழ்ச் சங்கத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் 7 ஜபிஸ் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இது.

7 பேர் வருகை தருவதாக குறிப்பிட்டிருந்தாலும் வனிதா IPS மற்றும் தமிழ்சந்திரன் IPS ஆகிய இருவர் மட்டுமே வந்திருந்தனர்.

இந்திய IPS அதிகாரிகளுக்கு பல காலமாக பிரித்தானியாவில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் அண்மைக் காலமாக மட்டும் அவ்வாறு பயிற்சிக்கு வரும் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து சிலர் கூட்டம் போடுகின்றனர்.

இது ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது பல தமிழர்கள் மத்தியில் சந்தேகத்தை கொடுக்கிறது.

ஏனெனில் ஜல்லிக்கட்டில் போராடிய தமிழ்மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி கடந்த மாதம் அழைத்து கூட்டம் நடத்தினார்கள்.

அவ் பொலிஸ் அதிகாரி பேசும்போது சீமான் போன்ற தமிழ் தலைவர்களை நம்ப வேண்டாம் என்றும் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்றும் கேட்டிருந்தார்.

அதேவேளை நேற்றைய கூட்டத்தில் பேசிய பொலிஸ் அதிகாரியிடம் தமிழ்நாட்டில் ஈழ அகதிகளை அடைத்து வைத்திருக்கும் சிறப்புமுகாம்களை ஏன் மூடவில்லை என்று கேட்டபோது தான் அரசியல் பேச வரவில்லை என்று கூறினார்.

சிறப்புமுகாம் கியூ பிராஞ் பொலிஸ் அதிகாரியினாலே நிர்வாகிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இந்த பொலிஸ் அதிகாரிகள் அதற்கு அரசியல் என்று கூறி பதில் அளிக்க மறுத்துவிட்டு சீமான் அரசியல் பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.

நீண்ட போராட்ட
த்தை நடத்தி வரும் ஈழத் தமிழர்களுக்கு தமக்கு ஆதரவானவர்கள் யார் என்பதை இனம் காணும் அறிவுகூட அற்றவர்கள் என்று இந்த பொலிஸ் அதிகாரிகள் நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இந்த பொலிஸ் அதிகாரிகளால் தமிழ் அகதிகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது ஒவ்வொரு ஈழத் தமிழரும் நன்கு அறிவார்கள்.

எனவே இந்த பொலிஸ் அதிகாரிகளை வரவழைத்து மாலை சால்வை போட்டு கௌரவித்து அவர்கள் மூலம் ஈழத் தமிழருக்கு உபதேசம் செய்ய முற்படுவதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்வது நல்லது.

இல்லையேல் இனி இவ்வாறு வருபவர்களுக்கு தக்க பதில் அளித்து அனுப்பி வைக்கப்படும்

தமிழ்நாட்டில் தமிழ் மக்களை துன்புறுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு லண்டனில் கூட்டம் போட்டு கௌரவிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

No comments

Powered by Blogger.