இலங்கையிடம், ஐ.நா வலியுறுத்தியது என்ன??

ஜனநாயக பெறுமதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம், ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிகாரபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.


ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டாரஸின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரீக் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் உன்னிப்பாக அவதானித்த வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டுமெனவும், அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் அமைதியான வழிகளில் சுமூகமான அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக பெறுமதிகளுக்கு மதிப்பளித்து, அரசியல் அமைப்பு நியதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#New Prime Minister #United Nations #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.