முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணிக்கு தோல்வி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட் இழப்புக்கு 187 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க 30 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதன்படி போட்டியில் இலங்கை அணிக்கு 188 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பொடுத்தடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதனடிப்படையில் இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களால் வெற்ற பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.