பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்கள் இந்தியாவில் ஒளிபரப்ப தடை!

பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து, தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கிஉள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஒளிபரப்பப்படுவதை தடை செய்யக்கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து, தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலிகளில் இந்திய தொடர்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்டதும் பின்னர் 2017-ம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.