தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம்

2018ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்புக்கு அமையவாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 59 இலட்சத்து 93 ஆயிரத்தை தாண்டுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹி;ந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 650 ஆகும் என்று தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம் .பழைய முறையிலும், புதிய முறைக்கு அமையவும் தேர்தலை நடத்த பாராளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியமாகும் என்று தெரிவித்தார்.

எடுக்கப்படவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றி உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியவும், எதிர்பார்த்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

தேவையான சட்ட ஏற்பாடு இருக்குமாயின் இரண்டு மாதங்களுக்குள் எந்த தேர்தலையும் நடத்த முடியும் என்று மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளர்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.