கேப்பாபுலவு மக்கள் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்புடன் கவனயீர்ப்பு!

இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்றுடன் 610 நாட்களை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது .கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமான இந்த போராட்டத்தில் முதற்கட்டமாக இந்த வருட ஆரம்பத்தில் ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன .இந்நிலையில் மீதமுள்ள தமது காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என தெரிவித்து மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் 610 ஆவது நாளான இன்றையதினம் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்புடன் கேப்பாபுலவு மக்கள் முல்லைதீவு நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு நகரில் ஆரம்பமான இந்த பேரணி மாவடட செயலகம் வரை சென்று பதில் அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்தது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட கேப்பாபுலவு மக்கள் விரைந்து தமது காணிகள் அனைத்தையும் இராணுவத்திடம் இருந்து தமக்கு மீட்டு தரக்கோரி ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபைக்கும் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர்.


#Tamilnews  #Tamil #Uiversity  #Student #Mullaithivu #Srilanka #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.