புதிய பிரதமரால் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிடைக்குமா?

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உரிய தீர்வை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையைிலான குழுவினர், அவர்களுடன் விசேட சந்திப்பொன்றில் இன்று (திங்கட்கிழமை) ஈடுபடபோவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்காக கொழும்பிலுள்ள மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு நாமல் தலைமையிலாக குழுவினர் சென்று விசேட சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக விசேட ஆவணமொன்று தயாரிக்கப்பட்டு சட்ட வலலுனர்களிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் குறுகிய காலத்தில் அரசியல் கைதிகள் விடயத்தில் தீர்வை மேற்கொள்ள முடியுமெனவும் அவ்வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றதன் முதல் இலங்கை அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியமாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.