ஆஸியை பாகிஸ்தான் அணி 3:0அடிப்படையில் வீழ்த்தியது!

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரை பாகிஸ்தான் அணி 3:0 என்ற அடிப்படையில் டுபாயில் நேற்று(28) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியுடன் கைப்பற்றியுள்ளது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப்பெற்றது.

பதிலளித்த அவுஸ்திரேலிய அணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது தோல்வியைத் தழுவியது.

இதன்படி, மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் வெற்றிக் கொண்டது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Dubai  #Austaliya #Pakisthan #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.